மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்… பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.!

மணிப்பூரில் மீண்டும் புதிதாக கலவரம் வெடித்ததில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் காமென்லோக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த வன்முறைக்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் ஊரடங்கு தளர்வு நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மணிப்பூரில் மெய்ட்டி இனத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணிக்கு பிறகு, அங்கு பெரும் கலவரம் வெடித்தது. அன்றிலிருந்து இந்த கலவரத்தில் 100க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.