அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனையில் இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை.!

Kaveri Hospital Surgery

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை என அமைச்சர் பேட்டி.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மற்றம் செய்ய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜி நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் மற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு உடனடியாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து நேற்று காவேரி மருத்துவர்களுடன் ஆலோசித்ததில், அவருக்குள்ள ரத்த கசிவை நிறுத்திவிட்டு தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும், இது தொடர்பாக ஆராய்ந்துவிட்டு இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் கூறியதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ நிலை குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கூடவரட்டும் என அமைச்சரின் மனைவி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்