“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்தால், "வேறு வழியின்றி" கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முன்னாள் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வெடேவ் காட்டத்துடன் பேசியுள்ளார்.

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இரண்டு நாடுகளும் தாக்கி கொண்டு இருப்பதால் இந்தப் போர் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கின்றன. ஒரு பக்கம் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த பதற்றமான சூழலில், புதின் உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை “தீயுடன் விளையாடுகிறார்” என்று சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பதிலாக, முன்னாள் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வெடேவ், “மூன்றாம் உலகப் போர் ஆபத்து உள்ளது” என்று டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவின் அரசு டிவி சேனலான RT-க்கு அளித்த பேட்டியில் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வெடேவ் “” டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை “தீயுடன் விளையாடுகிறார்” என்று விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இப்படி பேசியிருக்கிறது ஒரே மோசமான விஷயம். “மூன்றாம் உலகப் போர் தான்”. இது ட்ரம்பிற்கு புரியும் என நான் நம்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் கொடுப்பதும், ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிப்பதும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்தால், “வேறு வழியின்றி” கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரித்தார். அங்கு பேசியது மட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் இதனை அப்படியே ஒரு பதிவாகவும் வெளியிட்டுள்ளார்.
மேலும், மெட்வெடேவின் எச்சரிக்கையும், டிரம்பின் விமர்சனங்களும், உக்ரைன் போர் உலக அளவில் மிக ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது. டிரம்ப், உக்ரைன் போரை முடிக்க முயற்சிக்கிறார், ஆனால் புதின் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து இப்படியான நிலைக்கு வந்திருக்கிறது.