ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன. 2022-ல் தொடங்கிய அவர்களது போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது இரு நாடுகளும் நேரடியாகப் பேசும் இரண்டாவது முயற்சியாகும். முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த மே 16, 2025 அன்று இதே இஸ்தான்புலில் நடந்தது. அப்போது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒரு சிறிய ஒப்பந்தம் மட்டும் ஏற்பட்டது. […]
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இரண்டு நாடுகளும் தாக்கி கொண்டு இருப்பதால் இந்தப் போர் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கின்றன. ஒரு பக்கம் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில், புதின் உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் […]