குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – TNPSC அறிவிப்பு

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று TNPSC அறிவிப்பு.
ஜூன் 18ம் தேதி நிலவரப்படி, குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117-ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது டிஎன்பிஎஸ்சி உயர்த்தியுள்ளது.
அதே நேரத்தில் இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த எழுத்துத் தேர்வு முடிவுகளை கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025