பாஜக நிர்வாகி S.G.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை நீதிமன்றம்..!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கடந்த 17- ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட எஸ்.ஜி சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் எனும் உத்தரவு பிறப்பித்து மதுரை விரைவு நீதிமன்றம்.இதற்கிடையில், எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தரப்பில் இந்த அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025