நீட் மசோதா… காணாமல் போவது கடிதமல்ல; ஒன்றிய அரசை விமர்சித்த எம்.பி வெங்கடேசன்.!

குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய நீட் மசோதா குறித்த கடிதம், வரவில்லை என உள்துறை அமைச்சகம் கூறுவது பற்றி ஒன்றிய அரசை எம்.பி வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தமிழக சட்டசபையில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஆவது தொடர்பாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் கடந்த ஜனவரி மாதம் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இக்கடிதம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த பதிலை சுட்டிக்காட்டி ஒன்றியஅரசை விமர்சித்துள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக, குடியரசுத்தலைவர் அலுவலகம் மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக பதில் அளித்துள்ளது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படி எந்த கடிதமும் வரவில்லை என தெரிவித்துள்ளது. இதன்மூலம் காணாமல் போவது கடிதம் அல்ல, ஒன்றிய அரசின் நிர்வாக நேர்மை என குறிப்பிட்டுள்ளார்.
நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கோரி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினேன்.
மேல்நடவடிக்கைக்காக அக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக பதில் தரப்பட்டது.
ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதமே வரவில்லை என்கிறது.
காணாமல் போவது கடிதமல்ல,
ஒன்றியஅரசின்
நிர்வாகநேர்மை. pic.twitter.com/bg9MDzfSqC— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025