பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி… அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு.!

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நியூயார்க்கில் யோகா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் சார்பில் அரசு விருந்தும் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பரம்பரிய பரிசு பொருட்கள் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து பேசிய மோடி, தனக்கு வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வ அரசு விருந்து அளித்த பைடன் மற்றும் நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
#WATCH | I want to thank US President Joe Biden for this wonderful dinner today. I would also like to thank First Lady Jill Biden for taking care of my visit to make it successful. Yesterday evening you opened the doors of your house for me: PM Modi during the official State… pic.twitter.com/ZQqzZV2kz5
— ANI (@ANI) June 23, 2023
மேலும் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், தற்போதைய சூழலில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, அது விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா வளரும். இந்தியா வளரும் போது உலகின் எல்லா நாடுகளும் வளரும் என்று கூறினார்.
பயங்கரவாதம் தான் மனிதகுலத்தின் எதிரி, அதனை நாம் கவனமாகக் கையாளவேண்டும். பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து சக்திகளையும் முறியடிக்கவேண்டும் என்று கூறிய மோடி, பயங்கரவாதத்தை அடக்க இந்தியா-அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனவும் கூறினார். இந்தியா-அமெரிக்கா உறவு பற்றி இந்த நூற்றாண்டின் சிறந்த கூட்டாண்மையை எங்கள் இரு நாடுகளின் உறவு வரையறுக்கிறது.
ஒரு பெரிய நோக்கத்திற்காக இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்குகின்றன, மேலும் எங்கள் ஒத்துழைப்பின் நோக்கம் முடிவற்றது என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார். அமெரிக்க காங்கிரஸில் பிரதமர் மோடியின் உரைக்கு அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர்.