கொரோனா, மக்கள் மீது பரிசோதிக்கப்பட்ட ஒரு உயிர்கொல்லி ஆயுதம்… உண்மையை உடைத்த வுஹான் ஆராய்ச்சியாளர்.!

Corona ChinaSpread

சீனா, வேண்டுமென்றே கொரோனாவை மக்களின் மீது ஆயுதமாக பயன்படுத்தியதாக கூறிய வுஹான் ஆராய்ச்சியாளர்.

கொரோனா பலி:

உலகெங்கும் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து முதன்முதலாக கொரோனா பரவியதாக தகவல் வந்ததை அடுத்து அங்கு மக்கள் வெளிவராத படி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுதும் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது.

உண்மை வெளிவந்தது:

ஒரு நேர்காணலில் சீனாவின் கொரோனா வைரஸ் பரவப்பட்டதாகக் கூறப்படும் வுஹானைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ, கூறும்போது கொரோனா வைரஸ் குறித்த திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். சாவோ ஷாவோ, வுஹானின் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bio Weapon:

சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங்கிற்கு அளித்த நேர்காணலில் சாவோ ஷாவோ கூறும்போது, மக்களை பரிசோதிப்பதற்காக சீனா இந்த கொரோனவை ஒரு பையோ (Bio Weapon) ஆயுதமாக பயன்படுத்தியது எனக் கூறினார். எந்த வைரஸ் சிறப்பாக மக்களிடையே பரவுகிறது என்பதை சோதிப்பதற்காக தனக்கும் தன்னுடன் பணிபுரியும் மற்ற நான்குபேருக்கும் சில வைரஸ் மாதிரிகள் கொடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

பரிசோதனை:

மேலும் சாவோ ஷாவோவுடன் பணிபுரியும் மற்றொரு ஆராய்ச்சியாளரான ஷான் சாவோவிடம் எந்த வைரஸ் அதிகமாக பாதிக்கும் திறனுடையது என பரிசோதிக்கும்படியும், மற்ற உயிரினங்களில் இதனை எப்படி எளிதாக பரவ வைப்பது என அவரது மேலதிகாரி கேட்டதாகவும் சாவோ ஷாவோ கூறினார்.

வைரஸ் பரவல்:

2019 ஆம் ஆண்டு வுஹானில் நடந்த இராணுவ உலக விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த சர்வதேச ஹோட்டலுக்கு சில ஆராய்ச்சியாளர்களை வைரஸை பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சாவோ ஷாவோ தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 2020 இல் சின்ஜியாங்கில் உய்குர்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதாகக் கூறி அங்கு வைரஸை பரப்புவதற்கும், வைரஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கண்காணிக்கவும் வைராலஜிஸ்ட் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுதியாக தெரிவித்த சாவோ ஷாவோ, நான் கூறியது எல்லாம் ஒரு சிறிய பகுதி தான் என்றும் தொற்றுநோயின் உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் ஆய்வில் உள்ளதாகக் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies