கவர்னரே.! அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்..! சு.வெங்கடேசன் எம்.பி

Venkatesan MP Tweet

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநரை கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி டிவீட்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜூலை 12ம் தேதி வரை  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி உள்ளிட்ட குற்றவழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில்  அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி டிவீட் செய்துள்ளார். அதில் அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர் அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்