கால்நடை இளநிலை மருத்துவ படிப்புக்கு இன்றே கடைசி.!

Veterinary Medicine

கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.

கால்நடை மருத்துவ இளநிலை படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என TANUVAS துணைவேந்தர் செல்வகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவம் & பராமரிப்பு படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 12ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில், விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது என்றார்.

மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்றும், அதற்கு  tanuvas அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்