குழந்தையை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் …!

minister Ma subramanian

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை பார்க்கச் செல்ல உள்ளேன்; குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வரும்.

இது கவன குறைவால் ஏற்படவில்லை என எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. உரிய விசாரணைக்குப் பின் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். என தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை  டீன் தேரணி ராஜன் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், குழந்தைக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தையின் தலையில் இருந்த நீர்க்கசிவு சரி செய்யப்பட்டது. குழந்தைக்கு ஏற்கனவே இருந்த பிரச்சனையால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. மூன்று பேர் கொண்ட குழுவாழ் குலாண்டகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமனையன் அவர்கள் கூறுகையில், ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது; பெற்றோர் கேட்டுக்கொண்டால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் தயார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்