இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு புதிய தலைவர் அஜித் அகர்கர்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களை தேர்ந்த்தெடுக்கும் பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். தேர்வு குழுவில் உள்ள 3 உறுப்பினர்கள் அஜித் அகர்கர் பெயரை ஒருமனதாக கூறி தேர்ந்தெடுக்கபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ தேர்வு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அஜித் காரகர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 191 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டியில் 2000ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்காக இவர் விளையாடும் போது 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தது இன்னும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. மேலும், அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்தவர் என்கிற சாதனையையும் அஜித் அகர்கர் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வு குழு தலைவராகவும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் அஜித் அகர்கர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் அகர்கர் தலைவராக இருக்கும் இந்த தேர்வு குழுவில் சிவ் சுந்தர் தாஸ் , சுப்ரதோ பானர்ஜி, சலீம் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.