கனமழை எதிரொலி.! வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணாமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain School leave

கனமழை காரணாமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. கோவை, தென்காசி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை வால்பாறை தாலுகாவில் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது.

வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.