பாலியல் வழக்கு – இருவிரல் பரிசோதனையை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவு!

இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தரமோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என்றும் இளம் வயது திருமணம் புகாருக்குள்ளான இருவர் நடத்தப்பட்ட விதிக்கு குறித்து 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை கையாளும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தில் தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.