ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு குண்டு எறிதலில் மேலும் தங்கப்பதக்கம்.!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை தஜிந்தர்பால் டூர் வென்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குண்டு (ஷாட்புட்) எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் டூர், மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். குண்டு எறிதலில் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தனது சிறந்த குண்டு எறிதலாக பதிவு செய்திருக்கிறார். இதனுடன் இந்தியா தனது 4-வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
TAJINDERPAL SINGH TOOR SUCCESSFULLY DEFENDED MEN’S SHOTPUT TITLE
Asian Record holder Tajinderpal Singh Toor has thrown the 7.26kg iron ball at a distance of 20.23 to claim 4th Gold for India at ongoing Asian Athletics Championships in Bangkok???????? pic.twitter.com/mZmUuWMNYR
— SPORTS ARENA???????? (@SportsArena1234) July 14, 2023
இது தஜிந்தர்பால் டூருக்கு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டாவது தங்கப்பதக்கமாகும், இதற்கு முன்பாக 2019இல் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் 20.22 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.