ஏவப்பட்டது சந்திரயான்-3: இஸ்ரோ குழுவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து.!

chandrayaan 3 Rahul Gandhi

இந்தியா உட்பட உலக நாடுகள் ஆவலுடன் காத்திருந்த சந்திரயான்-3 விண்கலம், இன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தரை பரப்பை ஆய்வு செய்யும். சந்திராயன் 3 விண்கலம் நிலவை ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி, நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று கோடிக்கணக்கான மக்கள், பெருமையுடன் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சந்திரயான் 3 என்பது 1962 இல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து விஞ்ஞான சமூகத்தின் பல தசாப்தங்களாக உழைப்பின் பலனாகும், அதைத் தொடர்ந்து 1969 இல் ISRO உருவாக்கப்பட்டது.

சந்திரயான் 3, பல ஆண்டுகால உழைப்பின் பலன். இது வெற்றி அடைந்தால், சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடாக நம்மை மாற்றும். இது உண்மையிலேயே மகத்தான சாதனை”

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்