ஹிமாச்சலில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி..!

marriage

ஹிமாச்சலில் கனமழைக்கு மதத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.  

வட இந்தியா முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது, சிர்மூரில் 106 மிமீ, சோலன் 38 மிமீ, பாலம்பூர் 28 மிமீ, ஜுபர்ஹட்டி 25 மிமீ, நர்கனாடா 24.5 மிமீ மற்றும் சிம்லாவில் 21 மிமீ மழை பெய்துள்ளது.  மேலும், ஜூலை 15 மற்றும் 16ம் தேதிகளில் கனமழை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் இரு குடும்பத்தினர் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கனமழை காரணமாக ஆஷிஷ் சிங்க – ஷிவானி தாக்கூர் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க இருந்தனர். ஆனால், கனமழை காரணமாக திருமண நிகழ்ச்சியை நடத்த இயலாமல் போனதால், வீடியோ கான்பரசிங் மூலம் திருமண நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அவர்களது உறவினர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்