அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
பூஞ்ச் நகரம் 80% முதல் 90% சதவீதம் வரை காலியாக உள்ளது என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் அந்தப் பகுதிகளில் பதுங்கு குழிகள் கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அது மட்டுமின்றி, பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இன்னும் அங்கு வசிக்கும் பலரும் வீட்டை விட்டு பயத்தில் வெளியே கூட வராமல் இருக்கிறார்கள். அப்படி அச்சப்பட்டு வீட்டிற்குள்ளே இருக்கும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மக்கள் பயப்படாமல் வெளிய வரலாம் என பேசி தைரியத்தை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்.
பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக, பூஞ்ச் நகரம் 80% முதல் 90% சதவீதம் வரை காலியாக உள்ளது. இது மிகவும் எனக்கு வேதனையாக இருக்கிறது. பாகிஸ்தானின் அத்துமீறல் காரணம் தான் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. இப்போது போர் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் வெளியே வரலாம்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பூஞ்ச், ரஜோரி, கதுவா மற்றும் சம்பா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து, அரசு அமைத்த தற்காலிக முகாம்களிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களும் அச்சப்படாமல் வெளியே வரலாம்.
எல்லையோர மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தான் எங்களுடைய கவலை. எனவே, அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு நிச்சயமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். மக்கள் அச்சமின்றி தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் எனவும், எல்லையில் அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியப் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.