மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜானி புனேவில் சடலமாக மீட்பு..!

Ravindra Mahajani

மராத்தி நடிகரும் இயக்குனருமான ரவீந்திர மகாஜனி புனேவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மராத்தி நடிகரும் இயக்குனருமான ரவீந்திர மஹாஜானி, புனேவில் உள்ள தலேகான் தபாடேவின் அம்பியில் உள்ள வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த வாடகை குடியிருப்பில் சுமார் எட்டு மாதங்களாக அவர் தனியாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பின், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரவீந்திர மஹாஜானியின் உடலை மீட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் இறந்தவர் ரவீந்திர மஹாஜானி என அடையாளம் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இதன்பின், மறைந்த மஹாஜானின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்த போலீசார், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்