தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளில் “விஜய் பயிலகம்” தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்‘ துவக்கம்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்க உள்ளதாக சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இன்று தளபதி விஜய் பயிலகம் திறக்கவுள்ள நிலையில், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் இன்று வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள காமராஜர் அவர்கள் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக, சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தி வருகிறார். 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நடத்திய இந்த ஆலோசனை மக்கள் இயக்க பணிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும், அரசியல் வருகை குறித்து விஜய் பேசியதாகவும் நிர்வாகிகளில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
