விஷால் – ஹரி கூட்டணியில் மாஸ் ஆக்ஷன் படப்பிடிப்பு துவக்கம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் விஷால் தனது வரவிருக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கான தனது பணிகளை சமீபத்தில் முடித்தார். இந்த படம் பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்போது, புரட்சி தளபதியின் அடுத்த படமான ‘விஷால் 34’ -ஐ பிரபல இயக்குனர் ஹரி இயக்கசிவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்று விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கான புதிய போஸ்டர்களைப் பகிர்ந்துள்ள அவர், “இதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம், இயக்குனர் ஹரியுடன் எனது 3வது கூட்டணி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்காலியமாக ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delighted & Pumped up to be part of this !
My 3rd combination with Director Hari. Looking forward to create the same magic as before & making it a special treat for audience worldwide.#Vishal34 – Shoot from today!#ProductionNo14 #Hari @stonebenchers @karthiksubbaraj pic.twitter.com/IpoHjpM01V
— Vishal (@VishalKOfficial) July 15, 2023
மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத்தை படக்குழு தேர்வு செய்துள்ளனர். இதற்கிடையில், விஷால் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ‘துப்பறிவாளன் 2’ படமும் கையிருப்பில் உள்ளது.