இந்தியாயவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்.! அமெரிக்க அரசு அதிகாரி ஜேனட் யெலன் கருத்து.!

Nirmala Sitharaman and Janet Yellen

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என அமெரிக்க கரூவூல செயலாளர் ஜேனட் யெலன் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த வருட ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடுகளை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த ஜி20 ஆலோசனை கூட்டமானது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி20 கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் கருவூல செயலர் ஜேனட் யெல்லென் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,  அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து இருப்பது பாராட்டுக்குரியது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்