பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெல்ல வேண்டும் எனவும் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

anbumani and ramadoss

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் 108 மாவட்டங்களைச் சேர்ந்த 216 தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனால், கட்சிக்குள் உள் முரண்பாடுகள் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, முகுந்தன் மற்றும் அவரது தாயார் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். பங்கேற்பு குறைவாக இருந்தபோதிலும், கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கான சில முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் ” கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு சிலர் வரவில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். மாநாட்டுக் களைப்பில் இருப்பதால் சிலர் கூட்டத்திற்கு வரவில்லை” என விளக்கம் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய ராமதாஸ் தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம் என பேசினார். இது குறித்து பேசிய அவர் ” சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள். தனியாக போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால், நிச்சயமாக கூட்டணியுடன் தான் போட்டியிடுவோம்” எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்