சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால், அன்புமணி பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், அனுமதி தரக்கூடாது என டிஜிபிக்கு மனு அளித்தார். முன்னதாக, ராமதாஸ் தரப்பு இதே கோரிக்கையுடன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது, ஆனால் அன்புமணி தரப்பு இந்த பயணத்திற்கு தடை இல்லை எனவும், திட்டமிட்டபடி நடைபயணம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது […]
சென்னை : அன்புமணியின் ‘தமிழக உரிமை மீட்பு பயணம்’ திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி சுற்றுப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நேற்றைய தினம் அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, டிஜிபி சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மாவட்ட காவல் […]
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் நேற்றைய தினம் முதல் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1ம் தேதி அன்று தருமபுரியில் நிறைவடையும் வகையில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் பெயர் […]
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோபிக் படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார், மேலும் இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அய்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், ‘The Lion of TamilNadu’ மற்றும் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ராமதாஸ் தனது பிறந்தநாளை தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் கொண்டாடி, 86 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு இதயம் நிறைந்த […]
விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸின் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இதற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நடைபயணம் நாளை முதல் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1 வரை தருமபுரியில் நிறைவடைய உள்ளது. ராமதாஸ், தனது அனுமதியின்றி இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும், பாமகவின் பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்துவதை தடுக்க […]
சென்னை : பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், பாமகவின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூலை 25) திருப்போரில்,`உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கட்சி தொண்டர்களை சந்திக்க போவதாக அன்புமணி நேற்றைய தினம் அறிவித்தார். இந்த நிலையில், அன்புமணி தலைமையில் நாளை (ஜூலை 25) முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு […]
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும், வழக்கறிஞர் கே. பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார். இந்த உத்தரவு, 2025 ஜூலை 20 அன்று, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை, கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது. நீக்கப்பட்டவர்களில், மைலம் தொகுதி எம்எல்ஏ சி. சிவக்குமார், […]
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 9 அன்று மாலை 6:30 மணியளவில், அவரது இல்லத்தில் உள்ள நாற்காலிக்கு அருகே இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், பாமகவில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் மோதலின் பின்னணியில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமதாஸ், […]
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக வெடித்துள்ளது. இந்த சூழலில், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது மேலும் பேசுபொருளாக வெடித்துள்ளது. இது தொடர்பாக விருத்தாச்சலத்தில் ஜூலை 11 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “என் வீட்டில், நான் உட்காரும் நாற்காலிக்கு அருகே லண்டனில் இருந்து […]
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ““என் வீட்டில், நான் உட்காரும் இடம் அருகேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. சாதாரணமானது அல்ல.. மிகவும் விலை உயர்ந்த கருவி, நேற்று முன்தினம் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அன்புமணியின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளித்த ராமதாஸ், தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, மறைமுக எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பேச்சு, பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதலை மேலும் […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், 2022இல் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார், மேலும் 2026 வரை […]
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிறுவனர் இராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் என மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக நிர்வாகக் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மூத்த மகள் காந்திமதி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், கூட்ட அறிவிப்புகளில் அன்புமணி ராமதாஸ் பெயரும், புகைப்படமும் இடம்பெறவில்லை. கடந்த ஐந்தாம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று பாமக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. பாமக மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் […]
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த உட்கட்சி மோதலின் விளைவாக, இருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, கட்சியின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 8, 2025) திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் […]
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருவரும் ஜூலை 8, 2025 அன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டமும், சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டங்கள், கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், கருத்து வேறுபாடுகளையும் மேலும் […]
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர் அன்புமணி ராமதாஸை நீக்குவதாக ஜூலை 5, 2025 அன்று திண்டிவனத்தில் அறிவித்தார். இந்த முடிவு, கட்சியின் உட்கட்சி மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அன்புமணியை நீக்கியதைத் தொடர்ந்து, புதிய 21 பேர் கொண்ட தலைமை நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், மற்றும் முன்னாள் ரயில்வே இணை […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற வேண்டி, பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மற்றும் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்க உள்ளனர். இந்த மனு, புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை நியமிக்கக் கோருவதற்காக இன்று (ஜூலை 4, 2025) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, பாமகவில் உட்கட்சி மோதலின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை 3, 2025) செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். “நிறுவனரும் தலைவருமான எனக்கு மட்டுமே நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அன்புமணி குறித்த கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்க்கவும், இது எனக்கு […]