சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோபிக் படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார், மேலும் இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
அய்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், ‘The Lion of TamilNadu’ மற்றும் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தை குறிக்கும் வகையில் ‘1987’ என்பதும் போஸ்டரில் உள்ளது.
Presenting the biopic of Dr. #Ramadoss titled #AYYA – #TheLionOfTamilNadu #இனவிடுதலைக்கானபோராட்டத்தின்வரலாறு @CheranDirector @gkmtamilkumaran @eka_dop @SundaramurthyKS #Maniraj @ponkathiresh @gibsonraj3 @onlynikil #அய்யா #மருத்துவர்அய்யா #DoctorAyya #RamadossBiopic
— Aari Arujunan (@Aariarujunan) July 25, 2025
இந்தப் படம் அவரது வாழ்க்கையையும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அவரது தாக்கத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.35 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தத் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பயோபிக்காக பார்க்கப்படுகிறது.
