“உரிமை மீட்புப் பயணத்துக்கு எதிர்ப்பு”.. அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் சார்பில் மனு.!
பாமக தலைவர் அன்புமணி நாளை தொடங்க உள்ள நடைபயணத்திற்கு எதிராக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பாக மனு கொடுத்துள்ளார்.

சென்னை : பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், பாமகவின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூலை 25) திருப்போரில்,`உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கட்சி தொண்டர்களை சந்திக்க போவதாக அன்புமணி நேற்றைய தினம் அறிவித்தார். இந்த நிலையில், அன்புமணி தலைமையில் நாளை (ஜூலை 25) முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு எதிராக மனு அளித்துள்ளார்.
அதன்படி, “எனது அனுமதி இன்றி அன்புமணி பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று உரிமை மீட்புப் பயணத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை விடுத்து அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதல் இதற்குக் காரணமாக உள்ளது. இதற்கு முன்பு, ராமதாஸ் தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று கும்பகோணம் பொதுக்குழுக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார். மேலும், கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளதாக இரு தரப்பினரும் மாறி மாறி கூறி வருகின்றனர், இது கட்சிக்குள் பிளவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.