சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிறுவனர் இராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் என மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக நிர்வாகக் […]
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த உட்கட்சி மோதலின் விளைவாக, இருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, கட்சியின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 8, 2025) திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் […]
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருவரும் ஜூலை 8, 2025 அன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டமும், சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டங்கள், கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், கருத்து வேறுபாடுகளையும் மேலும் […]
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர் அன்புமணி ராமதாஸை நீக்குவதாக ஜூலை 5, 2025 அன்று திண்டிவனத்தில் அறிவித்தார். இந்த முடிவு, கட்சியின் உட்கட்சி மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அன்புமணியை நீக்கியதைத் தொடர்ந்து, புதிய 21 பேர் கொண்ட தலைமை நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், மற்றும் முன்னாள் ரயில்வே இணை […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற வேண்டி, பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மற்றும் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்க உள்ளனர். இந்த மனு, புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை நியமிக்கக் கோருவதற்காக இன்று (ஜூலை 4, 2025) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, பாமகவில் உட்கட்சி மோதலின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை 3, 2025) செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். “நிறுவனரும் தலைவருமான எனக்கு மட்டுமே நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அன்புமணி குறித்த கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்க்கவும், இது எனக்கு […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று ஜூலை 2, 2025 அன்று திட்டவட்டமாக தெரிவித்தார். “கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முழு அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகத் தொடர்ந்து பணியாற்றுவார்,” என்று ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அன்புமணி, […]
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், பாமகவினர் யாரும் அருளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். அருள், கட்சித் தலைமை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி […]
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக, சமீபத்தில் கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார். மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், 2025 ஜூன் 29 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பாமகவில் நிலவும் உட்கட்சி மோதல் குறித்து கருத்து தெரிவித்தார். “அன்புமணியின் பின்னால் இருப்பது […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அவர் “காலையில் இலந்தை பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுங்கள் என்றால், ராமதாஸ் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து […]
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்திருந்தார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். […]
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புறகு அவர் நலமுடன் சிகிச்சை பெற்று மீண்டு வரவேண்டும் என அன்புமணியும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். பிறகு அருள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று விடும் திரும்பினார். இதனையடுத்து இன்று […]
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார். பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” […]
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் “100% பொய்யானவை” என்று கூறியுள்ளார். தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு […]
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் நேற்றைய தினம் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருவரும் பூரணமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என […]
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ், சென்னையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறிய குற்றச்சாட்டு ஒன்றை மறுத்து, அதனை “அப்பட்டமான பொய்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை […]
காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ” என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் […]
காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. நேற்றைய தினம் திருவள்ளூரில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தந்தையாக ராமதாஸ் அவர்கள் ஆணையிட்டால் மகனாக தலைவராக அவற்றை செய்வதற்கு காத்திருக்கிறேன். நீங்கள் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியிடன் உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்றும், தங்களுக்கு பிபி இருப்பதால் டென்ஷனாக வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி தனது தந்தைக்கு வேண்டுகோள் […]
திருவள்ளூர் : பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே 2026-ல் ஆட்சி அமைக்கும் எனவும் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி கூறியுள்ளார். பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நீண்ட காலமாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தமிழகத்தில் சமூகநீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்களின் நலன் என எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை என்பதால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருக்கின்றனர் […]
விழுப்புரம் : ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், பூந்தமல்லியில் அன்புமணியும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை நீக்கம் செய்து, மாநில மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கரை புதிய பொதுச்செயலாளராக நியமித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வடிவேல் ராவணன், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கம் செய்துள்ளதோடு ராமதாஸ் விரைவில் பொதுக்குழுவை […]