குமரேசன் ரெடி.! விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்புக்கு தயாரான நடிகர் சூரி!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. தற்போது, நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளதை வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட அவர், குமரேசன் ரெடி…படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
குமரேசன் ரெடி!#ViduthalaiPart2 Shooting In Progress #vetrimaaran @rsinfotainment pic.twitter.com/aW7fzaOG77
— Actor Soori (@sooriofficial) July 17, 2023
திண்டுக்கல் அருகே சிறுமலை காடுகளில் மீண்டும் முகாமிட்டுள்ள படக்குழுவினர், அடுத்த 3 நாள்கள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளனர். இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது ‘விடுதலை’ இரண்டாம் பாகம் மீண்டும் திரையில் வருவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025