தமிழகத்தில், அரசு மருத்துவர்கள் பணி நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.!

GovtDoctors MHC

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணி நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

தமிழகத்தில் 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்று பணிநியமனத்திற்கு காத்திருப்போர்களுக்கு நியமன ஆணை வழங்க தடை விதித்து சென்னை உயநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழகத்தில் காலியாக இருந்த 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வை நடத்தியது தொடர்பாக 14 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இன்று விசாரித்தத்தில், தேர்வு முடிந்து பணி ஆணை வழங்குவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் 300 நாட்கள் பணிபுரிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதது குறித்து தமிழக அரசும், மருத்துவக்கல்வி இயக்குநரகமும் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஆகஸ்டு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்