ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்! கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

HockeyChampionship2023

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

சென்னையில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 தொடருக்கான கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழா டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார்.

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள 2023 ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்  தொடருக்கான கோப்பை, சின்னத்தை அறிமுகம் செய்தார் அமைச்சர் உதயநிதி. கோப்பையை கொண்டு செல்லும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்