மேற்கிந்திய தீவை துவம்சம் செய்யும் இந்திய பந்து வீச்சாளர்கள் 103/7 (19)

ind vs wi

இந்திய அணி,மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் 1-0 வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இதில் முதல் போட்டியானது கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது.தற்பொழுது வரை 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டையும் ,தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முகேஷ் குமார் 1 விக்கெட்டையும்  ஷர்துல் தாக்கூர் ,குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா  ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், அலிக் அதானாஸ், ரோவ்மேன் பவல், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், டொமினிக் டிரேக்ஸ் யானிக் கரியா

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்