டாஸ்மாக் இருக்கு…! பள்ளிக்கூடம் இல்லை..! – விஜயகாந்த்

தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் V.K. புதூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் சுமார் 200 குழந்தைகள் கோவிலிலும், கல்யாண மண்டபத்திலும் கல்வி கற்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் டெட்ரா பேக்குகளில் கடைகள், அதிநவீன பார்கள், மது விற்பனை, வெளிநாட்டு மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது என டாஸ்மாக் விற்பனையிலும் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றுவதிலும் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் உரிய தீர்வு காண வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசு @CMOTamilnadu, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டி அறிக்கை. pic.twitter.com/2cyCAcGIkD
— Vijayakant (@iVijayakant) July 29, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025