கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடிவிபத்து.! விசாரணை அதிகாரி நியமனம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் எம்.பி தம்பிதுரை, இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சரும், கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகில், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எந்த வித எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விற்பனை எதுவும் செய்யவில்லை என பதில் அளித்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பட்டாசு கடை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை மேற்கொள்ள சிப்காட் நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பவணந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.