10 அடி ஆழ குழிக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற தாய் கைது..!

திருவள்ளூர், கொசவன்பாளையம் அருகே, பச்சிளம் குழந்தையை பத்து அடி ஆழமான குழிக்குள் போட்டு கற்களை வைத்து பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்துள்ளார். பொதுமக்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தகவலின் பெயரில் அங்கு வந்த விஏஓ, போலீசார் குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த கொடூரமான செயலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.