அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குக: தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், அலுவலகங்கள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர கோரிதனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்த வெளியான அறிக்கையில், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதி நீரை கர்நாடக நிர்வாகத்தை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆகஸ்ட் 10- ஆம் தேதி காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.