என்ன நடந்தாலும் என் கடமையில் இருந்து தவற மாட்டேன் – ராகுல் காந்தி ட்வீட்..!

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்து ராகுல் காந்தி ட்வீட்.
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றங்களை நாடிய ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து வழக்கை விசாரித்த பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்றும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, என்ன நடத்தாலும் என்றும் என் கடமை மாறாது. இந்தியா என்ற எண்ணத்தைப் பாதுகாப்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Come what may, my duty remains the same.
Protect the idea of India.
— Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025