பாகிஸ்தானில் தடம் புரண்டது ஹசாரா விரைவு எக்ஸ்பிரஸ் 15 பேர் பலி

Hazara Express derailed

பாகிஸ்தானில் ஹசாரா விரைவு ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ராவல்பிண்டி ரயில் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த  ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் உயிரழிப்பு என்றும்  மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர் என  உள்ளூர் செய்தி சேனல் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது

மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

விபத்து காரணமாக, அப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் சுக்கூர் மஹ்மூதுர் ரஹ்மான் மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்