திருமணமே ஆகல…ஆனா நம்ம இலியானாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! பெயர் என்ன தெரியுமா?

Ileana D'Cruz

தமிழில் விஜய்க்கு காதலியாக நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை இலியானா, தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இலியானா சில மாதங்களுக்கு முன்பு, திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அவர் திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரது கணவர் யாராக இருக்கும் என அனைவரும் காத்திருந்த நிலையில், இலியானா தனது ரகசிய காதலனான மைக்கேல் டோலனை கடந்த மே 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இப்போது தனது ஆண் குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Ileana D'Cruz
Ileana D’Cruz [File iamge]

குழந்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்ததாக குறிப்பிட்ட அவர் தனது ஆண் குழந்தையின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார். எங்கள் அன்பான மகனை உலகிற்கு வரவேற்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ள புகைப்படத்தில், தனது மகனுக்கு “Koa Phoenix Dolan” என்று பெயரிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்