எதிர்க்கட்சிகள் கடும் அமளி..! மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இத்தனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியுள்ளது.
மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
இதன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுவார் என்று தெரிவிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025