மணிப்பூர் வன்முறை: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்..! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Kiren Rijiju

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்கள் இடையே நடந்து வரும் வன்முறையில், 150க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், வடகிழக்கு எம்.பி.க்கள் மன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இரு சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் இந்த சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் புதிதல்ல, பழமையானவை என்று கூறினார்.

மேலும், இரு சமூகத்தினரும் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க, மத்தியப் படைகள் ஒரு பெரிய இடைவெளி உருவாகியிருப்பதாகவும், மணிப்பூர் மாநிலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக் கொண்டார்

ஏனெனில், மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நடப்பதால், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதால் பாதுகாப்புப் படையினரால் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது. அவ்வாறு நடத்தினால் அப்பாவி உயிர்களை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்