தமிழகத்தைச் சேர்ந்த 8 காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு தேர்வு!

தமிழகத்தை சேர்ந்த 8 காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான விருது வழங்கப்பட உள்ளது.
அதன்படி, அடையார் துணை ஆணையர் (ஏஎஸ்பி) பொன் கார்த்திக் குமார், ஏசிபி ஜான் விக்டர், காவல் ஆய்வாளர்கள் ரம்யா, ரவிக்குமார், விஜயா, வனிதா, சரஸ்வதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.