ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் செப்டம்பரில் இந்தியா வருகிறார்.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பங்கேற்பார் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தியப் பயணம் அவரது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி20 மாநாடு என்பது உலகப் பொருளாதார ஒத்துழைப்புக்கான உலகின் தலைசிறந்த கூட்டம் என்றும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வலுவான, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான வளர்ச்சிக்குக் கொண்டு வருவதற்கு அந்த கூட்டம் முக்கிய பங்கு வகுக்கிறது.
ஜி20 மாநாடு உறுப்பினர்களாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.