மத்திய பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

PMModi 3rdLEco

மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதுபோன்று, 2,475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா – பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலை என 1,580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும், மத்திய பிரதேசத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சந்த் ரவிதாஸ் கோவிலுக்கு பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார். சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வதும் நமது பொறுப்பு. கோவிட் தொற்றுநோய்களின் போது, ஏழைகளை பசியுடன் தூங்க விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

அதன்படி, நாங்கள் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ தொடங்கி 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கினோம், இன்று முழு உலகமும் எங்களின் முயற்சியைப் பாராட்டுகிறது. எங்கள் அரசின் கவனம் ஏழைகளின் நலன் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரமளிப்பதில் உள்ளது. இன்று தலித், பிற்படுத்தப்பட்ட அல்லது பழங்குடியினராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, புதிய வாய்ப்புகளை எங்கள் அரசு வழங்கி வருகிறது என உரையாற்றி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்