இந்த சம்பவம் மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது – சசிகலா

sasikala

நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சசிகலா அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வேறுபாடுகளால் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதில் சின்னத்துரை என்ற மாணவனையும், அவரது சகோதரி மாணவி சந்திரா செல்வியையும் சக மாணவர்களே அரிவாளால் கொடூரமாக தாக்கியிருப்பது மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் பாடலை இளம் வயது முதல் கற்றுக்கொடுத்து வந்தபோதிலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், சமீபத்தில் வெளிவந்த ஒரு சில தமிழ் திரைப்படங்களும் இது போன்ற வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டதோ என்ற ஐயமும் எழுகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ செல்வங்கள் மத்தியில் எந்தவித ஏற்ற தாழ்வுகள், சாதிய பிரிவினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. அதை உறுதி செய்கின்ற பணியினை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்ற சாதிய மோதல்களை ஒடுக்க வேண்டிய நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். நாங்குநேரியில் நடைபெற்ற இந்த விரும்ப தகாத சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்