இவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2023) தலைமைச் செயலகத்தில் நடத்தினார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 5 வரை நடைபெறும். இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஒய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அளிக்கப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்