Bomb Blast : பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது தாக்குதல்.! 3 பொதுமக்கள் உட்பட 8 பேர் காயம்.!

பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனம் முற்றிலும் சேதமடைந்ததுள்ளது.
இந்த தாக்குதல் ஆனது உயர்தர வெடிக்கும் சாதனத்தால் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மாலி கேல் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒன்பது பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஜூலை 30 அன்று, மாகாணத்தில் உள்ள காரில் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025