Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி!

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கொழுக்கட்டை ஒரு முக்கியமான இனிப்பு. பூரண கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையில் பூரணம் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை கொழுக்கட்டை. பூரணத்தில் தேங்காய், முந்திரி, பாதாம், வேர்க்கடலை, கிர்ணி விதை, காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம், ஏலக்காய் ஆகிய பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த பொருட்கள் சேர்ப்பதால் பூரண கொழுக்கட்டைக்கு ஒரு தனித்துவமான சுவை கிடைக்கும்.
இந்த செய்முறையில், பச்சரிசியை நன்கு அரைத்து, கெட்டியான மாவு கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த மாவு கலவையில் பூரணம் சேர்த்து, கொழுக்கட்டை அச்சில் வைத்து வேக வைக்கப்படுகிறது. இட்லி குக்கரில் வேக வைத்தால், கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து, மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
இந்த செய்முறையை பின்பற்றி, சுவையான பூரண கொழுக்கட்டைகளை நீங்களும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 150 கிராம்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- வேர்க்கடலை – 1/2 கப்
- பிஸ்தா – 1 கப்
- பாதாம் பருப்பு – 1 கப்
- முந்திரி – 2 கப்
- கிர்ணி விதை – 2 கப்
- காய்ந்த திராட்சை – 1 கப்
- கருப்பு எள் – 1/2 கப்
- ஏலக்காய் – 6
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
இப்பொழுது நாம் முதலில் எடுத்து வைத்திருக்கும் 150கி பச்சரிசியை நன்கு கழுவி 2-3 மணி நேரத்திற்கு ஊறவைக்கவேண்டும்.அதனை பின்னர் ஊறவைத்த அரிசியை வடிகட்டியை கொண்டு தண்ணீர் முழுவதும் நீங்குமாறு வடிகட்ட வேண்டும். இப்பொழுதும் பச்சரிசியானது ஈரப்பதத்துடன் தான் இருக்கும் இவற்றை நீக்க ஒரு சிறிய காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை பரப்ப வேண்டும். இதில் 90% ஈரப்பதம் நீங்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிதளவு ஈரப்பதத்துடன் கையில் எடுத்தால் அரிசி உடையும் அளவிற்கு இருக்க வேண்டும். இதற்கு பிறகு அரிசியை மிக்ஸியில் நன்கு மாவாகும் வரை அரைக்க வேண்டும். அரைத்த மாவை ஒரு ஜல்லடையை கொண்டு கொரகொரவெனு இருக்கும் அரிசியை நீக்கி தெளிவான மாவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கொழுக்கட்டைசெய்ய தேவையான மாவு தயார், இதற்கு அடுத்து நாம் கொழுக்கட்டை உள்ளே வைக்கப்போகும் கலவையை தயார் செய்யப்போகிறோம்.
இப்பொழுது தேவையானக்கலவையை செய்ய ஒரு கடாயில் குறைந்த அளவு நெருப்பில் எடுத்துவைத்திருக்கும் வேர்க்கடலை, பதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் முந்திரி சற்று அதிகமாக சேர்க்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக கிர்ணி விதை மற்றும் கருப்பு எள்ளை சேர்க்கவும். இந்த கருப்பு எள் இதில் முக்கியமானது நாம் வறுக்கும் பொழுது இது கருகிவிடாதவாறு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக ஒரு கடாயில் துருவிவைத்திருக்கும் தேங்கயாயை ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் வறுக்க வேண்டும். இத பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் நட்ஸ் கலவையுடன், வறுத்த தேங்காய், காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம், ஏலக்காய், நாட்டு சர்க்கரை ஆகிவற்றை சேர்த்து மிக்ஸியில் கொர கொரவென அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ,1 1/4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இதனை 2-3 நிமிடங்கள் செய்தால் கெட்டியான பச்சரிசி மாவு கலவை தயாராகிவிடும்.
இப்பொழுது நாம் இறுதிகட்டத்தில் இருக்கிறோம் பூரண கொழுக்கட்டை செய்ய நம்மிடம் அதற்கான அச்சு இருந்தால் அதனுள் அரிசிமாவை முதலில் வைக்க வேண்டும் அதன்பின் தயார் செய்து வைத்திற்கும் சுவையான தேங்காய் கலவையை உள்ளே வைத்து உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் கொழுக்கட்டையை தயார் செய்து இட்லீ குக்கரில் 5-7 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும். உங்களிடம் கொழுக்கட்டை செய்ய அச்சு இல்லை என்றால் உங்கள் விருப்பப்படி தேவையான வடிவத்தை கையால் செய்துகொள்ளலாம். இப்பொழுது விநாயகர் சதுர்த்திக்கு சூப்பரான ஸ்டைலில் பூரண கொழுக்கட்டை தயார்.