Cauvery Issue: நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.!

கடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. பின், பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனால் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திவுள்ளனர்.
இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பகுதியில் விவசாயிகள் ரயிலை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிஆர் பாண்டியன் தலைமையில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025