“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக ஜூலை 23-ஆம் தேதி தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 4-வது நாளாக மருத்துவமனையில் மருத்துவர்களுடைய கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனையடுத்து தற்போது, அவர் இயல்பாக இருப்பதாகவும் வழக்கமான பணிகளை இரு நாட்களில் மேற்கொள்வார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்” எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலம் குணமாகி மீண்டும் வீடு திரும்பு பழையபடி அரசியல் பணிகளை தொடர வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் செய்தியாளர்களை சந்திக்கும்போதும் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் உடல்நலம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்ததாவது ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 24, 2025